தொழில்நுட்பம்

 

ஃபேஸ்புக்கில் புதிதாக வந்துள்ள ராக்கெட் ஐகான் என்ன செய்யும்?

Dated 05042017 03:55 PM



ஃபேஸ்புக் ஆப் வைத்திருக்கிறீர்களா? தற்போடு வந்துள்ள புதிய அப்டேட்டில் உள்ள ராக்கெட் ஐகான் பற்றி உங்களுக்கு தெரியுமா? ஃபேஸ்புக் எப்போதுமே அப்டேட்டில் ஆச்சர்யமளிக்கும் விஷயங்களை அளிக்கும். இப்போதும் இந்த ராக்கெட் ஐகான் மூலம் யாரும் எதிர்பார்க்காத ஒரு புதிய அப்டேட்டை வழங்கியுள்ளது. இந்த ஐகானை அறிமுகம் செய்ததற்கு ஃபேஸ்புக் கூறும் காரணங்கள் இவை தான்...

இந்த ராக்கெட் ஐகான் மூலம் நீங்கள் இருக்கும் பகுதியின் பிரபலமான பதிவுகளை காண முடியும். இதற்கு நீங்க அந்த பக்கத்தை லைக் செய்திருக்க வேண்டிய அவசியமும் இல்லை. அல்லது ஒரு தனி நபரின் பதிவு வைரலாகி இருந்தாலும் அவர் உங்களது நண்பராக இல்லாவிட்டாலும் அந்த பதிவை உங்கள் டைம்லைனில் பார்க்க இந்த ராக்கெட் ஐகான் உதவும்.

இந்த ராக்கெட் ஐகானில் ஃபேஸ்புக் பெரும்பாலும் வீடியோ மற்றும் ஃபேஸ்புக் இன்ஸ்டன்ட் ஆர்ட்டிகிள் பதிவுகளையே காட்டுகிறது. ஃபேஸ்புக் உங்களது டைம்லைனில் நீங்கள் பதிவுடும் பதிவுகள், நீங்கள் விரும்பும் ஃபேஸ்புக் பக்கங்கள், நீங்கள் அதிகம் விரும்பும் விஷயங்கள் என ஒவ்வொருவருக்குமான தனி டேட்டாவை எடுத்து வருகிறது. அதன் மூலம் ஒருவரது விருப்பம் என்ன என்பதை தெளிவாக கண்டறிந்து அவரது விருப்பத்துக்கு ஏற்ற பதிவை அவரது டைம்லைனில் நண்பர்கள் அல்லது நண்பர்களின் நண்பர்கள் என்ற அடிப்படையில் காட்டுகிறது.

            

ஆனால் இந்த ராக்கெட் ஐகான், நீங்களோ அல்லது உங்களது நண்பரோ விரும்பாத ஒரு பக்கத்திலிருந்து உங்களது விருப்பத்துக்கு ஏற்ற பதிவை எடுத்து தருகிறது. இதே வசதி இன்ஸ்டாகிராமில் எக்ஸ்ப்ளோர் என்ற பெயரில் இருப்பது குறிப்பிடத்தக்கது. சமீபகாலமாக ஃபேஸ்புக் மற்ற ஆப்களில் உள்ள சிறப்பம்சங்களை தனக்குள் எடுத்து வருகிறது. ஸ்னாப்சாட்டில் உள்ள கேமரா வசதி, இன்ஸ்டாகிராமில் உள்ள எக்ஸ்ப்ளோர் மற்றும் ஃபில்டர் வசதி, ஸ்டோரிஸ் வசதியை மெசன்ஜரிலும் கொண்டு வந்துள்ளது ஃபேஸ்புக்.

ஏற்கெனவே இன்ஸ்டன்ட் ஆர்ட்டிகிள் மூலம் உங்கள் இடத்துக்கு அருகில் எந்த செய்தி பிரபலம் என்பதை கொண்டு வந்த ஃபேஸ்புக் தற்போது இந்த வசதியை அறிமுகம் செய்துள்ளது. எல்லா விதமான மக்களையும் தனக்குள் இணைக்கும் ஃபேஸ்புக் புதிய செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் நியூஸ் ரூம் திட்டத்துக்கு இது அடிப்படையாக இருக்கும் என்று கூறப்படுகிறது. ஃபேஸ்புக்கின் இந்த அதிரடி அப்டேட்டுகள் எல்லாவற்றுக்கு பின்புமே ஒரு பெரிய திட்டத்துக்கான அடித்தளம் இருக்கும் என்பது அனைவரும் அறிந்ததே.

ஃபேஸ்புக் டேட்டாக்களை வைத்து மிகப் பெரிய மாயாஜாலங்களை காட்டும் நிறுவனம். தனது ஒவ்வொரு அப்டேட்டிலும் ஏதோ ஒரு புதிய விஷயத்தை அறிமுகம் செய்து டேட்டாவை பெறுகிறது. வரும் காலத்தில் உலகில் யாருக்கு எது பிடிக்கும் என்பதை ஃபேஸ்புக்கிடம் கேட்டு தெரிந்து கொள்ளலாம் என்ற நிலை உருவாகலாம். இதற்காக டேட்டா சென்டர்களில் அதிக கவனம் செலுத்தி வருகிறது ஃபேஸ்புக். உங்களுக்கு தியாகராய நகரில் உள்ள குறிப்பிட்ட கடையில் இரண்டாவது தளத்தில் உள்ள டி-ஷர்ட் தான் பிடிக்கும் எனும் அளவுக்கு ஒரு நாள் ஃபேஸ்புக் பூதாகரமாக வளர்ந்து நிற்கும்...இது தான் ஃபேஸ்புக்கின் டேட்டா உ(பு)த்தி...

 

 

 

ப்ளூ டிக் பணம் அனுப்பியதற்கான ரசீதா? இந்தியா ஸ்பெஷல் வாட்ஸ்அப்!?

Dated 05042017 02:51 PM



இந்தியாவில் முன்னிலை வகிக்கும் வாட்ஸ்அப் விரைவில் கேஷ்லெஸ் எகானமி எனப்படும் பணமில்லா பரிவர்த்தனை செய்யும் சேவையை, தனது அப்ளிகேஷனில் அறிமுகப்படுத்தப் போவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. 2016-ம் ஆண்டு நவம்பர் மாதம் பழைய 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என இந்தியப் பிரதமர் மோடி அறிவித்தார். கறுப்புப் பணத்தை ஒழிப்பதற்காக இந்தியாவில் பணமதிப்பு நீக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது எனத் தொடக்கத்தில் சொல்லப்பட்டது. ஆனால் அதன்பின் பணமில்லா பரிவர்த்தனை முன்னிலைப் படுத்தப்பட்டது.

                        

அதன்பின், பணமில்லா பரிவர்த்தனை மேற்கொள்ள Bhim (Bharat Interface for Money) என்ற செயலியும் இந்திய அரசின் சார்பாக அறிமுகப்படுத்தப்பட்டது. ஆனால் 'பேடிஎம் (Paytm)', 'மொபிக்விக் (MobiKwik)' மற்றும் 'ஃப்ரீ சார்ஜ் (Free Charge)' நிறுவனங்கள் பணமில்லா பரிவர்த்தனையை முன்னிலைப்படுத்தி அதீத முன்னேற்றம் கண்டன. சோஷியல் மீடியா நிறுவனமான வாட்ஸ்அப் விரைவில் இந்த சேவையில் களமிறங்கப் போவதாக தற்போது செய்திகள் வெளிவந்துள்ளன.

சமீபத்தில் ஒருநாள் சுற்றுப்பயணமாக இந்தியா வந்த வாட்ஸ்அப் நிறுவனத்தின் நிறுவனர்களில் ஒருவரான பிரையன் ஆக்டன், மத்திய தகவல் தொலைதொடர்புத் துறை அமைச்சர் ரவி சங்கர் பிரசாத்தை சந்தித்துப் பேசினார். அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "எங்கள் நிறுவனத்தைப் பொறுத்தவரை இந்தியா மிக முக்கியமான நாடு. சுமார் 20 கோடிக்கும் அதிகமான மக்கள் வாட்ஸ்அப் மூலமாகத் தங்கள் நண்பர்கள், குடும்பம் மற்றும் சமுதாயத்தோடு இணைந்திருப்பதில் நாங்கள் பெருமிதம் கொள்கிறோம். இந்தியாவின் டிஜிட்டல் வர்த்தக செயல்பாட்டுக்கு வலு சேர்க்கும் வகையில் வாட்ஸ்அப் பங்களிக்கும்" எனத் தெரிவித்திருந்தார். இதன் தொடர்ச்சியாக தான் தனது அப்ளிகேஷன் மூலம் பணமில்லா பரிவர்த்தனை மேற்கொள்ளும் நடவடிக்கையில் இறங்கியிருப்பதாகத் தெரிகிறது.

UPI (Unified Payments Interface) எனப்படும் ஒரே இடத்தில் பணம் செலுத்தும் வகையில் வாட்ஸ்அப் தனது அப்ளிகேஷனில் மாறுதல் கொண்டுவர உள்ளதாகத் தெரிகிறது. மொபைல் அப்ளிகேஷன் மூலமாகப் பணம் அனுப்பும் நிறுவனங்களின் தலைமைப் பொறுப்பில் இருப்பவர்களை இதற்காக அந்த நிறுவனம் பணியில் அமர்த்தி வருகிறது.



ஃப்ரீ சார்ஜ் நிறுவனமானது 'Chat and Pay' என்ற பெயரில் வாட்ஸ்அப் மூலமாக பணம் அனுப்பும் வசதியை ஏற்கெனவே அறிமுகப்படுத்தியிருந்தது. ஃப்ரீ சார்ஜ் அப்ளிகேஷனில் இருந்து பணம் அனுப்ப வேண்டியவரை வாட்ஸ்அப்பில் செலக்ட் செய்து அதன்பின் தொகையை என்டர் செய்வதன் மூலமே பணம் அனுப்ப முடியும். எளிதாகவும் விரைவிலும் பணம் அனுப்ப முடிவதால் இது யூசர்கள் இடையே நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது. இந்நிலையில், வாட்ஸ்அப் நிறுவனமும் இதே போல பணமில்லா பரிவர்த்தனையில் களமிறங்கப் போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த வசதியை வாட்ஸ்அப் முதல் முறையாக இந்தியாவில் அறிமுகப்படுத்த இருக்கிறது. ஆறு மாத காலத்துக்குள் இதை அந்நிறுவனம் செயல்படுத்தும் எனத் தெரிகிறது. மொபைல் எண்ணை அடிப்படையாகக் கொண்டு செயல்படுவதால் வாட்ஸ்அப் மூலமாகப் பணம் அனுப்புவது எளிதானதும், பாதுகாப்பானதும் கூட! பாதுகாப்பை மேலும் உறுதிப்படுத்தும் வகையில் ஆதார் எண் மூலம் பயனாளர்களை சரிபார்க்கவும் வாட்ஸ்அப் திட்டமிட்டு வருகிறதாம்.

வாட்ஸ்அப் பணமில்லா பரிவர்த்தனையை அறிமுகப்படுத்தும் பட்சத்தில், வங்கிக் கணக்கோடு இணைத்திருக்கும் மொபைல் எண்ணை வாட்ஸ்அப்பில் பயன்படுத்த வேண்டியிருக்கலாம். இதன் மூலமாக இனி தனிநபருக்கு நேரடியாகப் பணம் அனுப்ப முடியும்.

 





கூகுளுடன் இணைந்த ஜியோ!
Dated 15032017 01:23 PM

வெற்றிநடை போட்டு வரும் ஜியோ நிறுவனம், அடுத்ததாக, கூகுளுடன் இணைந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. கூகுளுடன் இணைந்து ஜியோ 4G ஸ்மார்ட் போனைத் தயாரிப்பதற்காக இரு நிறுவனமும் இணைந்துள்ளன. ஜியோ 4G சேவைக்காக, பிரத்யேகமாகத் தயாரிக்கப்படும் இந்த ஸ்மார்ட்போன்மூலம் வாடிக்கையாளர்களைக் கவர திட்டமிட்டுள்ளதாம் ஜியோ. ஆனால், இந்தத் திட்டம் மிகவும் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும், இதன்மூலம் ஜியோவின் ஆப்ஸ்களை மேம்படுத்தவும் திட்டமிட்டுள்ளனர்.

                                   
குறிப்பாக, ஜியோ ஸ்மார்ட் டி.வி தயாரிக்கும் பணிகளிலும் இந்த நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. ஜியோ ஸ்மார்ட் டி.வி, இந்த ஆண்டு இறுதியில் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.



 பாதிப்புகள் ஏற்படுத்தும் மொபைல் கதிர்வீச்சு... பாதுகாப்பு வழிமுறைகள்!
Dated 11032017 11:05 AM

மொபைல் வெளிப்படுத்தும் கதிர்வீச்சு அபாயம் குறித்து நாம் அடிக்கடி கேள்விப்பட்டிருப்போம். உலகம் முழுவதும் 400 கோடிக்கும் மேற்பட்டோர் அன்றாடம் மொபைலை பயன்படுத்தி வருகின்றனர். மொபைல் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை அடிப்படையில் இந்தியா முன்னிலை வகிக்கிறது. பணிச்சூழல் காரணமாக அன்றாட வாழ்வில் ஒரு நாள்கூட மொபைல் இல்லாமல் கடத்துவது கடினம் என்ற நிலை உருவாகியுள்ளது. இந்நிலையில், மொபைலில் இருந்து வெளிப்படும் கதிர்வீச்சு அபாயம் குறித்தும் நாம் மனதில் கொள்ள வேண்டும்.

மொபைல் கதிர்வீச்சு மின்காந்த அலைகள் (Radiofrequency Electromagnetic Fields) புற்றுநோய் ஏற்பட ஒரு காரணியாக அமையலாம் என உலக புற்றுநோய் ஆய்வுக் கழகம் கடந்த 2011-ம் ஆண்டு வெளியிட்ட ஆய்வறிக்கை தெரிவிக்கிறது. உறுதியாக இல்லாவிட்டாலும், புற்றுநோய் ஏற்பட இவையும் காரணிகளாக அமையலாம் என்பதை 'குரூப் 2பி' என வகைப்படுத்துவார்கள். அந்தப் பட்டியலில்தான், உலக சுகாதார நிறுவனத்தால் மொபைல் கதிர்வீச்சு சேர்க்கப்பட்டுள்ளது.

மேலும், செல்போனிலிருந்து வெளிப்படும் கதிர்வீச்சினால் புற்றுநோய் மட்டுமின்றி பல்வேறு பாதிப்புகள் ஏற்பட வாய்ப்பிருக்கிறது என 'எலக்ட்ரோமேக்னடிக் பயாலஜி மற்றும் மருந்துகள் இதழ்' (Electromagnetic Biology and Medicine Journal) மேற்கொண்ட ஆய்வு தெரிவிக்கிறது. மொபைல் கதிர்வீச்சு காரணமாக சாதாரண தலைவலி, உடல் சோர்வு, தோல் சிதைவில் தொடங்கி மூளையில் ஏற்படும் புற்றுநோய் கட்டிகள் வரை பாதிப்பு ஏற்படலாம் என இந்த ஆய்வு எச்சரிக்கிறது. அதே நேரத்தில், மொபைலில் இருந்து வெளிப்படும் கதிர்வீச்சின் அளவு குறைவு என்பதால் இத்தகைய பாதிப்பு ஏற்பட வாய்ப்பு குறைவு என பல ஆய்வுக் குழுக்கள் மறுக்கின்றன. ஆனாலும் மொபைல் பயனாளர்களாகிய நாம் முன்னெச்சரிக்கையோடு இருக்க வேண்டியது அவசியமாகிறது.

மொபைலில் இருந்து வெளிப்படும் கதிர்வீச்சை நமது உடல் உள்வாங்கும் அளவை 'குறிப்பிட்ட உறிஞ்சு வீதம்' அதாவது 'ஸ்பெசிபிக் அப்சார்ப்சன் ரேட் (Specific Absorption Rate -SAR)' என்றழைக்கிறார்கள். சர்வதேச தகவல் தொடர்பு ஆணையத்தின் விதிமுறையின்படி, ஒருவர் 30 நிமிடம் இடைவிடாமல் மொபைலை காதில் வைத்துப் பேசும்போது உடல் எவ்வளவு கதிர்வீச்சை உள்வாங்கப்படுமோ, அதன் சராசரியே 'குறிப்பிட்ட உறிஞ்சு வீதம்' எனப்படுகிறது. இந்தியாவைப் பொறுத்தவரை ஒரு கிராமிமுக்கு 1.6 வாட்ஸ் என்பதை விடக் குறைவாகத்தான் இந்த SAR கதிர்வீச்சின் அளவு இருக்க வேண்டும் என்ற கட்டுப்பாடு உள்ளது.

உங்கள் ஸ்மார்ட்ஃபோனில் *#07# என்ற எண்ணை டயல் செய்தால் ஒரு திரை தோன்றும். அதில் 1.6 வாட்ஸ் என்ற அளவை விடக் குறைவான கதிர்வீச்சு குறிப்பிட்டிருந்தால் உங்கள் மொபைல் பாதுகாப்பானது. இதை விட அதிகமாக கதிர்வீச்சை வெளிப்படுத்தும் தரம்குறைந்த மொபைல்களைப் பயன்படுத்துவது, நாமே பலவித உபாதைகளை வரவேற்பது போலாகிவிடும். இன்றைய டிஜிட்டல் யுகத்தில் மொபைல் பயன்படுத்துவதை தவிர்க்க முடியாவிட்டாலும், அதன் பாதிப்புகளில் இருந்து முடிந்தவரை நம்மை தற்காத்துக்கொள்ள முடியும்.

மொபைல் கதிர்வீச்சில் இருந்து தற்காத்துக்கொள்ள சில வழிமுறைகள்:
சிக்னல் குறைவான இடங்களில் அதிக நேரம் மொபைலைப் பயன்படுத்தும்போது, பொதுவாக மொபைல் அதிக அளவில் கதிர்வீச்சை வெளிப்படுத்தும். எனவே சிக்னல் குறைவான இடங்களில் அவசியம் ஏற்பட்டால் மட்டும் மொபைலைப் பயன்படுத்தவும். 

மொபைலில் பேட்டரி சார்ஜ் 15 சதவிகிதத்துக்கும் குறைவாக உள்ளபோது அதிக அளவு கதிர்வீச்சு வெளிப்படும் என ஆய்வுகள் தெரிவிக்கிறது. எனவே பேட்டரி சார்ஜ் குறைவாக உள்ளபோதும் மொபைலை பயன்படுத்துவதைக் குறைத்துக் கொள்ள வேண்டும். அதே போல் சார்ஜ் போட்டுக்கொண்டே மொபைல் பயன்படுத்துவதையும் தவிர்க்க வேண்டும். 

அதிக நேரம் மொபைலில் பேசும்போது கதிர்வீச்சின் பாதிப்பானது அதிகரிக்கும் வாய்ப்பிருக்கிறது. மொபைலை காதில் வைத்துப் பேசும்போது கதிர்வீச்சு காரணமாக மூளையானது நேரடியாகப் பாதிக்கும் வாய்ப்பு இருப்பதாகக் கூறப்படுகிறது. எனவே முடிந்தவரை ஹேண்ட்ஸ் ஃப்ரீ மோட் அல்லது தரமான இயர்ஃபோன்கள் பயன்படுத்தி மொபைலில் பேசலாம். 

நாம் அன்றாடம் பயன்படுத்தும் தொலைக்காட்சி, ரேடியோ ஆகியவற்றிலிருந்தும் சிறிய அளவில் கதிர்வீச்சு வெளிப்படும். ஆனால் அவை உடலிலிருந்து சற்றுத் தொலைவில் இருப்பதால் அதனால் பாதிப்பு ஏற்பட வாய்ப்புக்குறைவு. குறைந்தது 20 செ.மீ தூர இடைவெளி இருந்தாலே கதிர்வீச்சு மின்காந்த அலைகளிலிருந்து நம்மைப் பாதுகாத்துக்கொள்ள முடியும். ஆனால் மொபைலை நாம் மிக நெருக்கமாக வைத்துப் பயன்படுத்துகிறோம் என்பதால் அதிக நேரம் பயன்படுத்துவதைக் குறைப்பது நலம். 

பொதுவாக மொபைலை தலையனைக்குக் கீழ் அல்லது அருகில் வைத்தபடி உறங்குவதைத் தவிர்க்க வேண்டும். 

கதிர்வீச்சின் பாதிப்பு குழந்தைகளுக்கு இரு மடங்கு இருக்கும் என்பதால், குழந்தைகள் மொபைல் பயன்படுத்துவதை முடிந்தவரை தவிர்ப்பது நலம். 

செல்போன்களை சட்டையின் இடதுபக்க பாக்கெட்டில் வைத்தால், கதிர்வீச்சின் மூலம் இதயம் பாதிக்கப்பட வாய்ப்பு உண்டு. எனவே அதைத் தவிர்க்க வேண்டும். 

அதிக நேரம் மொபைலில் பேசவேண்டியிருந்தால் ஒரே காதில் வைத்துப் பேசாமல், சிறிது நேர இடைவெளியில் இரண்டு காதுகளிலும் மாற்றி மாற்றி வைத்துப் பேசவும்.
தோலில் கதிர்வீச்சு ஊடுருவுவதைத் தவிர்க்கும் 'ரேடியேஷன் டிஃபெண்டர் கேஸ்கள்' சந்தையில் கிடைக்கின்றன. அவற்றை வாங்கிப் பயன்படுத்துவதன் மூலம் கதிர்வீச்சில் இருந்து பாதுகாத்துக் கொள்ள முடியும். 

வழக்கத்தை விட அதிகம் சூடாகும் பேட்டரி கொண்ட ஸ்மார்ட்ஃபோன்கள் உபயோகிப்பதையும் தவிர்க்க வேண்டும்.

4ஜி, 5ஜி என நெட்வொர்க் சேவை அசுரவேகத்தில் வளர்ச்சியடைந்து வரும் இந்த டிஜிட்டல் யுகத்தில், கதிர்வீச்சில் இருந்து ஏற்படும் பாதிப்புகளில் இருந்து பாதுகாத்துக்கொள்வதில் நாம்தான் கவனமாக இருக்க வேண்டும்.

இனி 50 எம்பி-ஜிமெயில்-அசத்தல் அப்டேட்.!

பயனாளர்கள் இனி 50 எம்பி அளவினுக்கு பைல்களை அனுப்பவும்-பெறவும் இயலுமென அறிவித்துள்ளது ஜிமெயில்.


இணைய உலகின் அதிகப்படியான தகவல்களைக் கொண்டதும்,அதிகம் பயன்படுத்தப்படுவதுமான கூகுள் உலவியின் பல சேவைகளைப்போல அதன் மற்றுமோர் தளம் தான் ஜிமெயில்.பெரும்பான்மையாக அலுவலக மற்றும் இதர பயன்படுகளுக்காக இதுவே பயன்படுத்தப்படுகிறது.மேலும் உலகு முழுவதும் இதன் பயனாளர்கள் எண்ணிக்கை அதிகமானதும் கூட.
அத்தகைய,ஜிமெயில் வழியாக இனி 50 எம்பி அளவுள்ள பைல்களை அனுப்பவும் பெறவும் இயலுமென அறிவித்துள்ளது கூகுள்.அதுகுறித்த விரிவான தகவல்கள் கீழே.









இனி 50 எம்பி-ஜிமெயில்-அசத்தல் அப்டேட்.!

ஜிமெயில்:

கூகுள் நிறுவனத்தின் ஜிமெயில் சேவையானது ஏப்ரல் 1 2004 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது.அறிமுகப்படுத்தப்பட்ட காலத்தில் இந்த சேவையினை பெற்றுக்கொள்ள ஏற்கனவே ஜிமெயில் பயன்படுத்துபவரின் அழைப்பு தேவை.இது அறிமுகப்படுத்தப்பட்ட போது போட்டியாளர்கள் தமது வாடிக்கையாளர்களை தக்கவைக்க சேமிப்பு அளவினை கூட்டினர்.மேலும் பாரிய மாற்றங்களைச் செய்தனர்.ஆனாலும் ஜிமெயில் வளர்ச்சி தொடர்ந்துகொண்டே இருக்கிறது.இதனைப்பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை சென்ற ஆண்டே நூறு கோடியைத் தாண்டிவிட்டது.









இனி 50 எம்பி-ஜிமெயில்-அசத்தல் அப்டேட்.!

25 எம்பி:

ஜிமெயில் மூலம் அதன் பயனாளர்கள் 25 எம்பி அளவுள்ள பைல்களை மட்டுமே ஜிமெயில் மூலமாக அனுப்பவும் பெறவும் இயலும்.அதற்கு அதிகமான அளவுள்ள பைல்களை கூகுள் டிரைவ் மூலமாக அப்லோட் செய்து அதன் லிங்கினை மட்டுமே ஜிமெயில் வழியாக அனுப்பிட இயலும். அதனைப்பெறுபவரும்,அந்த லிங்க்கின் வழியாகவே டவுன்லோட் செய்துகொள்ள இயலும்.









இனி 50 எம்பி-ஜிமெயில்-அசத்தல் அப்டேட்.!

அதிகரிக்கப்பட்ட அளவு:

ஆனால்,தற்போது அந்த அளவினுக்கான வரையறையினை அதிகரித்துள்ளது.அது என்னவெனில் தற்போது ஜிமெயில் பயனாளர்கள் 50எம்பி வரை அளவுள்ள பைல்களை ஜிமெயில் வழியாக அனுப்ப இயலும்.
அதற்கு,
ஜிமெயிலினை ஓப்பன் செய்துகொண்டு>கம்போஸ் மெயில்>க்ளிக் கூகுள் டிரைவ்>நீங்கள் அனுப்ப வேண்டிய ஃபைலை தேர்ந்தெடுத்துக்கொண்டு>எந்த வடிவில் குறிப்பிட்ட ஃபைலை அனுப்பிட வேண்டுமோ அதனை தேர்ந்தெடுத்தக்கொள்ள வேண்டும் அதாவது டாகுமெண்ட்ஸ்,ஷீட்ஸ்,ஸ்லைடு போன்ற ஏதேனும் ஒன்றினை தேர்ந்தெடுத்துக்கொண்டு அதன் பிறகு ஜிமெயில் அனுப்பலாம்.
90% பயனர்களுக்கு தெரியாத 7 ஆண்ட்ராய்டு இரகசியங்கள்.!
Dated 09032017 12:40 PM
உங்கள் கையில் இருக்கும் ஆண்ட்ராய்டு சாதனங்கள் நீங்கள் நினைத்துக்கூட பார்க்கமுடியாத வண்ணம் திறன் கொண்டவைகள், அது நம்பமுடியாத விடயங்களை தன்னுள் அடைத்து வைத்துள்ளது.! 
ஒப்பிடும் போது, ஆப்பிள் கருவிகளை விட ஆண்ட்ராய்டு கருவிகள் பெருவாரியான மக்களை கவர்வதற்கு முக்கியமான காரணம் அவைகள் 'யூசர் பிரெண்ட்லி' கருவிகளாகும். பயனர் நட்பு என்றால் பயனர் அவரின் கருவியை எப்படியெல்லாம் தன் விருப்பத்திற்கு ஏற்ற வண்ணம் மாற்றியமைக்க விரும்பினாலுக் அதற்கு வளைந்துகொடுக்கும் தன்மை கொண்ட நிலைப்பாட்டை தான் 'யூசர் பிரெண்ட்லி' என்கிறோம். வெளிப்படையாக கூறவேண்டுமென்றால் நம்மில் பெரும்பாலானோர்கள் ஆண்ட்ராய்டு கருவிகளை நமக்கேற்ற வசதியான ஒரு கருவியாக பயன்படுத்துவதில்லை. உண்மையில் உங்கள் கையில் இருக்கும் ஆண்ட்ராய்டு சாதனங்கள் நீங்கள் நினைத்துக்கூட பார்க்கமுடியாத வண்ணம் திறன் கொண்டவைகள், அது நம்பமுடியாத விடயங்களை தன்னுள் அடைத்து வைத்துள்ளது.
அம்மாதிரியான ஆண்ட்ராய்டு இரகசியங்கள் 90% பயனர்களுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அதை தெரியபப்டுத்தும் தொகுப்பே இது.! 
 டெக்ஸ்ட்-டூ-ஸ்பீச் உங்களால் ஒரு கட்டுரையை வாசிக்க மட்டுமில்லாது அதை கேட்கவும் முடியும் அதற்கு நீங்கள் ஒரு ஆண்ட்ராய்டு சாதனத்தை கையில் கொண்டிருக்க வேண்டும். ஒருவேளை உங்களுக்கு உள்வரும் தகவல்களை பார்ப்பதற்கு பதில் நீங்கள் கேட்க விரும்பினால் செட்டிங்ஸ் > அக்ஸஸிபிலிட்டி சென்று டெக்ஸ்ட்-டூ-ஸ்பீச் அவுட்புட் ஆப்ஷனை ஆன் செய்யவும். 
ஸ்மார்ட்போன் ரிமோட் கண்ட்ரோல் 
ஸ்மார்ட்போன் ரிமோட் கண்ட்ரோல் செட்டிங்ஸ் > செக்யூரிட்டி சி என்று டிவைஸ் அட்மினிஸ்ட்ரேட்டர்ஸ் சென்று ஆண்ட்ராய்டு டிவைஸ் மேனேஜர் அருகாமையில் இருக்கும் பெட்டிகளில் அல்லோ ரிமோட் லாக் அண்ட் ஏரேஸ் ஆப்ஷனை இயக்க ஒருவேளை நீங்கள் உங்கள் ஸ்மார்ட்போனை இழந்தால் நீங்கள் அதை எளிமையாக இந்த குறிப்பிட்ட வலைத்தளம் மூலம் நீங்கள் கண்டறியலாம் மற்றும் பிளாக் செய்யாமல் உங்கள் தகவல்களை மீட்கலாம்.
எளிமையான பேட்டரி சேவர் 
எளிமையான பேட்டரி சேவர் நீங்கள் உங்கள் திரையில் கருப்பு அல்லது எளிய இருண்ட பின்னணி தேர்வு செய்தால், உங்கள் ஆண்ட்ராய்டு அக்கருவியின் ஆட்டோமட்டிக் பிக்சல் ஹைலைட்டிங் அணைக்கப்படும் மற்றும் இதன் மூலம் நீங்கள் உங்கள் சாதனம் நீண்ட நேரம் சார்ஜ் நீடிக்கப் பெறுவதை காணலாம். இந்த குறிப்பிட்ட அம்சம் தற்போதைக்கு அனைத்து ஆண்ட்ராய்டு கருவிகளிலும் கிடைக்காது என்பதும் ஒருவேளை அப்டேட் செய்யப்பட்டு என்பதால் முயற்சி செய்து பார்க்க பரிந்துரைக்கப்படுகிறீர்கள். 
கெஸ்ட் மோட் 
கெஸ்ட் மோட் நீங்கள் தற்காலிகமாக மற்றொரு நபருக்கு உங்கள் தொலைபேசியை கொடுக்க வேண்டும் அதே சமயம் உங்கள் தனிப்பட்ட தரவுகளின் ரகசியத்தையும்பாதுக்காக்க வேண்டுமெனில் உங்களுக்கு கெஸ்ட் மோட் உதவும். இரண்டு விரல்களால் மேலிருந்து கீழே ஸ்வைப் சிறிது மேல் வலது பக்கத்தில் உள்ள பயனர் ஐகானை டாப் செய்யவும். ஆட் கெஸ்ட் ஐகான் தோன்றும், இப்போது நீங்கள் உங்கள் ஸ்மார்ட்போனை கையாளும் நபர் எடுக்க அனுமதிக்க வேண்டிய நடவடிக்கைகளை தேர்வு செய்ய முடியும். ஸ்க்ரீன் மெக்னீபையர் ஸ்க்ரீன் மெக்னீபையர் சில கண்பார்வை கோளாறு கொண்ட மக்கள் பெரும்பாலும் இந்த வசதியை இயக்கி கொள்ள பரிந்துரைக்கப்படுகிறீர்கள். வெறுமனே செட்டிங்ஸ் > அக்ஸஸிபிலிட்டி > மேக்னிபிக்கேஷன் கெஸ்டர்ஸ் செயல்படுத்துவதின் மூலம் நீங்கள் டாப் செய்யும் குறிப்பிட்ட இடம் மட்டும் டிஸ்ப்ளேவில் பெரிதாகும்.





டிஜிலாக்கர் - வாகன ஓட்டிகளுக்கான வரப்பிரசாதம்!
Dated : 02032017 2:00 PM


டூவீலரில் போகும் போது ஹெல்மெட் போடுவது போல, வாகனங்களுக்கான ஆவணங்களைக் கைவசம் வைத்திருக்க வேண்டிய கட்டாயம் இருக்கிறது. இதனால் படும் அவஸ்தைகளைச் சொல்லி மாளாது. அப்பப்பா...காரில் செல்வோர் டேஷ்போர்டில் வைத்து பத்திரமாக எடுத்துச் செல்லலாம் என்றாலும், தப்பித்தவறி அதை மறந்துவிட்டுச் செலும்போதுதான் பிரச்னைகள் ரவுண்டு கட்டி அடிக்கும். அதையெல்லாம் சமாளித்துவிட்டு போகக்கூடிய பக்குவம் வேண்டும்.
இருசக்கர வாகனங்களில் பயணிப்போர், இந்த ஆவணங்களைப் பராமரிக்க தனி கவனம் செலுத்த வேண்டியிருக்கிறது. என்னதான் டேங்க் கவரில் வைத்துச் சென்றாலும், தவிர்க்க முடியாத மழை மற்றும் வாட்டர் சர்வீஸ் செய்யும்போதும், அவை நனைந்து வெறும் வெள்ளை பேப்பா் மட்டுமே மீதம் இருக்கும். அதில் இருந்தது எல்லாம் ஜி-பும்-பா ஆகி இருக்கும். வாகன தணிக்கையின்போது இந்த ஆவணங்கள் இல்லையென்றால், என்னென்ன பிரச்னைகளைச் சந்திக்க வேண்டியிருக்கும் என்பது அனைவரும் அறிந்ததுதான்.
 
இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, ஒரு அசத்தலான தீர்வை மத்திய அரசு அறிமுகம் செய்திருக்கிறது. அது என்னனு கேட்கிறீங்களா மக்கழே! டிஜிலாக்கர் என்று அழைக்கப்படும் இந்த மின்னணு ஆவண பாதுகாப்பு பெட்டகம், தற்போது மொபைல் அப்ளிகேஷன் வடிவத்தில், அனைத்து தரப்பு மக்களுக்கும் பயன் தரும் விதத்தில் களமிறங்கியுள்ளது.  இந்த வசதி மூலமாக, இனி வரும் நாட்களில் அரசு துறைகளில் காகிதமில்லா ஆவண புரட்சி வித்திடும் என்று கருதப்படுகிறது. 
ஆன்லைனில் நமது முக்கிய ஆவணங்களை பாதுகாப்பாக சேமித்து வைக்கும் தொழில்நுட்பம்தான் இந்த டிஜிலாக்கர். கூகுள் டிரைவ் போன்ற இந்த வசதி தற்போது அரசாங்கத்தால் வழங்கப்படுகிறது. எனவே, இது மிகவும் நம்பகமான ஆவண பாதுகாப்பு முறை.
மேலும், அரசாங்கத்தால் வழங்கப்படும் தனிநபர் சான்றுகள், ஆவணங்களை இந்த டிஜிலாக்கர் மூலமாகவே நேரடியாகப் பெற முடியும். இதன்மூலமாக, டிரைவிங் லைசென்ஸ் பெறுதல், வாகன பதிவு ஆவணம் போன்றவற்றை எளிதாக பெறும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. தவிர இதிலேயே பாதுகாப்பாக வைத்துக் கொள்ளலாம்.

 
குறிப்பாக இந்த வசதி, வாகன ஓட்டிகளுக்கு ஒரு வரப்பிரசாதம் என்று உறுதியாகக் கூற முடியும். ஏனெனில் வாகன ஓட்டிகள் ஆவணங்களைப் பாதுகாக்க மற்றும் பராமரிப்பதில் இருக்கும் நடைமுறை சிரமங்களை இந்த டிஜிலாக்கர் முற்றிலும் ஒழித்துவிடும். மத்திய போக்குவரத்து அமைச்சகமும், தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சகமும் இணைந்து இந்த சேவையை வழங்குகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. இது பயன்பாட்டுக்கு வரும்போது கார், பைக்கில் செல்லும்போது இனி காகித ஆவணங்களை எடுத்துச் செல்ல வேண்டிய அவசியம் இருக்காது.
வாகன தணிக்கையின்போது, உங்களது மொபைல்போனில் இருக்கும் டிஜிலாக்கர் செயலி மூலமாகவே ஆர்சி புக், டிரைவிங் லைசென்ஸ் போன்றவற்றை சம்பந்தப்பட்ட தணிக்கை அதிகாரியிடம் காட்டலாம். உங்களது ஆவணங்களை அதிகாரி சரிபார்த்தபின், அந்த ஆவணங்களை நீங்கள் பாதுகாப்பாகப் பயன்படுத்த முடியும். இயற்கை சீற்றங்கள், ஆவணங்கள் காணாமல் போகும் பிரச்னைகளுக்கும் இது சிறப்பானதொரு தீர்வாக அமையும்.
          
இதேபோன்று, சாலை விதிமுறைகளை மீறுவோர்க்கும் இந்த செயலி மூலமாகவே தகவல் அளித்து, அபராதத்தை செலுத்தும் நடைமுறையையும் கொண்டு வர திட்டமிடப்பட்டிருக்கிறது. இந்த டிஜிலாக்கரை மொபைல்போனில் பதிவிறக்கம் செய்து, அதில் உங்களது மொபைல்போன் எண் மற்றும் ஆதார் எண் உள்ளிட்ட விபரங்களை அளித்து, எளிமையாகக் கணக்கை துவங்கிக் கொள்ளலாம். டிரைவிங் லைசென்ஸ், ஆர்சி புக் என்றில்லை, இதர அரசு ஆவணங்களை பெறுவதற்கும், தற்போதுள்ள ஆவணங்களை ஸ்கேனர் கருவி மூலமாக, சுய கையொப்ப அத்தாட்சியுடன் நீங்களே இதில் பதிவேற்றி பாதுகாக்கும் வசதியும் அளிக்கப்படும்.
பிரதமர் மோடியின் டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் கீழ் இந்த புதிய சேவை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஆன்ட்ராய்டு ஸ்மார்ட்போன் வைத்திருப்பவர்கள் இந்த வசதியை பெற முடியும். தெலங்கானா மற்றும் டெல்லியில் இந்த வசதி முதலில் நடைமுறைக்கு வர இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதேநேரத்தில், ஹேக்கர்கள் மூலமாக தகவல்கள் திருடப்படும் அபாயம் இருப்பதுதான், இந்த திட்டத்திற்கு மிகப்பெரிய சவாலாக இருக்கும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. 

     







நோக்கியாவின் கிளாஸிக் 3310 இஸ் பேக்... ஸ்னேக் விளையாட தயாரா!?
 
Dated : Feb 28/02/2017 4: PM


உலகம் முழுவதும் உள்ள மொபைல் போன் பிரியர்கள், குறிப்பாக நோக்கியாவின் பல்லாண்டுகால ரசிகர்கள் எதிர்ப்பார்த்த நோக்கியாவின் புதிய ஆண்ட்ராய்டு மொபைல்கள், நோக்கியா 3, 5 மற்றும் 6 ஆகிய மூன்றும் 16 வருடங்களுக்கு முன்பு அறிமுகம்செய்யப்பட்டு, விற்பனையில் சாதனைபடைத்த நோக்கியா 3310-ன் மேம்படுத்தப்பட்ட மொபைல், நேற்று பார்சிலோனாவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் வெளியிடப்பட்டது.

பொதுவாக கிரிக்கெட் மேட்சுகளையும், சில சமயங்களில் டென்னிஸ், பாட்மின்டன் போன்ற மற்ற சில விளையாட்டுகளின் நேரலைகளையும் மட்டுமே பார்க்கும் பலர், நேற்று பார்சிலோனாவில் நடைபெற்ற 'மொபைல் வேர்ல்ட் காங்கிரஸ்' என்னும் வருடாந்திர தொழில்நுட்பக் கண்காட்சியின் நேரலையைப் பார்த்திருப்பார்கள். 
அதற்கு ஒரே காரணம், நோக்கியா! ஆம், ஆண்ட்ராய்டு இயங்குதளத்தின் போட்டியைச் சமாளிக்க முடியாமல் திணறி, தனது மொபைல் பிரிவை மைக்ரோசாஃப்டுக்கு சில ஆண்டுகளுக்கு முன்பு விற்ற அதே நோக்கியா, HMD Global என்னும் நிறுவனத்தின் மூலம் மீண்டும் மொபைல் போன் சந்தைக்கு வந்துள்ளது. கடந்த சில மாதங்களாக நாம் பெரிதும் எதிர்பார்த்துவந்த நோக்கியா 3310 மற்றும் ஆண்ட்ராய்டு இயங்குதளத்தில் இயங்கும் நோக்கியா 3, 5 மற்றும் நோக்கியா 6 ஆகிய 4 புதிய மொபைல்கள், நேற்று அறிமுகம்செய்யப்பட்டன.

நோக்கியா 6

சில மாதங்களுக்கு முன்பு சீனாவில் அறிமுகப்படுத்தி 23 நொடிகளில் விற்றுத்தீர்ந்த அதே நோக்கியா 6-ன் சர்வதேச மாடல், நேற்று வெளியிடப்பட்டது. 5.5 இன்ச் முழு HD திரையுடன்கூடிய கொரில்லா கிளாஸ், குவால்காம் நிறுவனத்தின் ஸ்னாப்டிராகன் 430 ப்ராசசர் உடன் 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி ரோமையும் இது கொண்டுள்ளது.

கேமராவைப் பொறுத்தவரை 16 மெகாபிக்சல் பின்புற கேமராவையும், 8 மெகாபிக்சல் முன்புற கேமராவையும் கொண்டுள்ளது. இந்த மொபைலில், இரண்டு ஒலிபெருக்கிகள் பொருத்தப்பட்டுள்ளதால், மிகச் சிறந்த ஒலியைக் கேட்க முடியும். மேலும், இதன் ஒலிபெருக்கிகள் டால்பி அட்மோஸ் தொழில்நுட்பத்தில் இயங்குவதால், 3டி ஒலியைத் துல்லியமாகக் கேட்க முடியும். மேட் ப்ளாக், சில்வேர், டேம்பேர்ட் ப்ளூ மற்றும் காப்பர் நிறங்களில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இதன் விலை, தோராயமாக 16,000 ரூபாய் இருக்கும் என்கிறார்கள்.

நோக்கியா 5

நோக்கியா 5, 5.2இன்ச் HD IPS திரையையும், குவால்காம் ஸ்னாப்டிராகன் 430 ப்ராசசர் உடன் 2ஜிபி ரேம், 16ஜிபி ரோம் மற்றும் முறையே 13 மெகாபிக்சல், 8 மெகாபிக்சல் பின்புற மற்றும் முன்புற கேமெராக்களைக்கொண்டுள்ளது. கூகுளின் பிரத்யேக அசிஸ்டன்ட் இதில் இயங்கும் என்பது சிறப்பு. மேட் ப்ளாக், சில்வர், டேம்பேர்ட் ப்ளூ மற்றும் காப்பர் நிறங்களில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இதன் விலை, தோராயமாக 13,000 ரூபாய் இருக்கும் என்று கருதப்படுகிறது.

நோக்கியா 3

நேற்று அறிமுகப்படுத்தப்பட்ட மொபைல்களிலேயே குறைத்த திறன்கொண்ட மொபைல் இதுதான். பாலிகார்போனேட் மற்றும் அலுமினியத்திலான கட்டமைப்புடன்கூடிய 5இன்ச் திரையையும் மீடியாடேக் 6737 ப்ராசசர் உடன் 2ஜிபி ரேம், 16ஜிபி ரோம் மற்றும் 8 மெகாபிக்சல் முன்புற மற்றும் பின்புற கேமராக்களைக் கொண்டுள்ளது. இதன் விலை, தோராயமாக 9,500 ரூபாய் இருக்குமென்று கருதப்படுகிறது.

நோக்கியா 3310

பலரும் ஆவலுடன் எதிர்பார்த்த, 16 வருடங்களுக்கு முன்பு அறிமுகமாகி கோடிக்கணக்காக எண்ணிக்கையில் விற்பனையான, உலகின் பிரபலமான மொபைல் நோக்கியா 3310 மீண்டும் பல்வேறு புதிய வசதிகளுடன் 22 மணிநேர டாக்டைம் மற்றும் ஒரு மாதத்துக்கு ஸ்டாண்ட்-பையில் இருக்கும் பேட்டரி திறனையும் கொண்டுள்ளது. 2.4இன்ச் வண்ணத் திரையுடன் மேம்படுத்தப்பட்டுள்ள இது, 16 MB நினைவகத்தையும் மற்றும் 2MP கேமெராவையும் கொண்டுள்ளது. மேலும் பழைய நோக்கியா ரிங்டோனும், ஸ்னேக் கேமும் இதில் உள்ளன. வார்ம் ரெட், எல்லோ, டார்க் ப்ளூ மற்றும் கிரே ஆகிய நான்கு வண்ணங்களில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இதன் விலை, தோராயமாக 3,500 ரூபாய் இருக்குமென்று கருதப்படுகிறது.

நோக்கியா 6,5 மற்றும் 3 ஆகிய மூன்று மொபைல்களும் சமீபத்திய ஆண்ட்ராய்டு பதிப்பான 7.1.1 நௌகட்டில் இயங்கும் என்று கூறப்பட்டுள்ளது. நோக்கியா 6 மற்றும் 5, 3000 mAh பாட்டரியையும், நோக்கியா 3, 2650 mAh பாட்டரியையும் கொண்டுள்ளது. மேலும் இந்த நான்கு மொபைல்களும் இரண்டாவது காலாண்டில் அதாவது ஏப்ரல்-ஜூன் மாதத்துக்குள் உலகம் முழுவதும் விற்பனைக்கு வருமென்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் நேற்றைய நிகழ்ச்சியில்... நோக்கியா, தான் உருவாக்கிய உலகின் முதல் 5G தொழில்நுட்பத்தின் முன்னோட்டத்தையும் அதன் வருங்கால இலக்குகளையும் அறிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 





மொபைலில் பேட்டர்ன்லாக் பயன்படுத்துறீங்களா? 1 நிமிஷம் இதைப் படிச்சுடுங்க!


ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் வைத்திருக்கும் பலரது மொபைலிலின் பாஸ்வேர்டு, எண்களாக இருக்காது. பேட்டர்ன் லாக்-ஆகத்தான் இருக்கும். ஒவ்வொரு முறையும் எண்களை டைப் செய்வது, அவசரத்தில் தப்பாக டைப் செய்து முழிப்பது போன்ற சிக்கல்கள் எல்லாம் வராமல் தடுப்பது இந்த பேட்டர்ன்லாக்தான்.
சின்னதொரு ஸ்வைப்பில் லாக்கை எடுத்து விடலாம். போனும் பாதுகாப்பாக இருக்கும். இந்த முறை மிக எளிதானதும், பாதுகாப்பானதும் கூட என்றுதான் நம்மில் பலர் நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் ஆண்ட்ராய்டு போன்களில் இந்த பேட்டர்ன் லாக் முறை நாம் நினைக்கும் அளவுக்கு எல்லாம் பாதுகாப்பானது இல்லை என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள். உங்கள் மொபைலில் பேட்டர்னை கொஞ்சம் கூட யோசிக்காமல், அசால்ட்டாக போட்டு அன்லாக் செய்துவிடும், புத்திசாலி நண்பர்களை கொண்டவர்களுக்கு இந்த விஷயம் ஏற்கெனவே தெரிந்திருக்கும்.

ஆண்ட்ராய்டு போன்களில் பெரும்பாலான பாஸ்வேர்டு பேட்டர்ன்களை வெறும் 5 தடவைகளுக்குள் கண்டுபிடித்துவிட முடியுமாம். இதுகுறித்து ஆய்வு செய்த சீனா மற்றும் இங்கிலாந்தை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் இதனை தெரிவித்துள்ளனர். நீங்கள் அன்லாக் செய்யும் போது, அதனை தூரத்தில் இருந்து வீடியோ எடுப்பதன் மூலமாகவோ, அல்லது கம்ப்யூட்டர் விஷன் அல்காரிதம் மென்பொருட்களைக் கொண்டோ உங்கள் ஆண்ட்ராய்டு டிவைஸ்களின் பேட்டர்ன் லாக்கை கண்டுபிடித்துவிட முடியும் என்கின்றனர் இவர்கள்.

அதுவும் நீங்கள் கடினமான பேட்டர்ன்கள் என நினைக்கும் பேட்டர்ன்களை இந்த முறையின் மூலமாக இன்னும் விரைவில் கண்டுபிடித்துவிட முடியும். அதுவும் நிதி சேவைகள் தொடர்பான வங்கி சேவைகள், தனிப்பட்ட தகவல்களை கொண்ட ஆப்ஸ்களை பயன்படுத்துபவர்கள் தங்களது டிவைஸ்களை பாதுகாக்க இந்த பேட்டர்ன் லாக் முறையினையே பயன்படுத்துகின்றனர். ஆனால் இந்த முடிவுகளை வைத்துப் பார்க்கும்போது, இது நீங்கள் நினைக்கும் அளவிற்கு பாதுகாப்பானது இல்லை என்பது தெரிகின்றது.

இந்த ஆய்வு முடிவுகளை கூட விட்டுவிடலாம். காரணம், இதில் கணினி உதவியுடன் கூடிய அல்காரிதம்கள், கேமராக்கள் ஆகியவை பயன்படுத்தப்பட்டுள்ளன. ஆனால் இவை எதுவும் இல்லாமலே, நிஜ வாழ்க்கையில் சிலர் உங்கள் போன் பேட்டர்ன்களை, உங்கள் கண் முன்னரே அன்லாக் செய்திருப்பார்கள்.

1. நீங்கள் நீண்ட நாட்கள் ஒரே பேட்டர்னையே பயன்படுத்துபவர் என்றால், பாதுகாப்பு குறித்தெல்லாம் ஆசையே இருக்கக் கூடாது. காரணம், உங்கள் வீடு, அலுவலகம், பொது இடங்கள் என அனைத்து இடங்களிலும் உங்களை சுற்றியிருக்கும் நபர்களுக்கு உங்கள் பேட்டர்ன் நன்றாகவே தெரிந்திருக்கும். இவர்களால் எளிதில் உங்கள் போன் பேட்டர்னை அன்லாக் செய்ய முடியும். எனவே அடிக்கடி பேட்டர்ன்களை மாற்றுவது நலம். இது ரொம்ப கஷ்டமான வேலை எல்லாம் இல்லையே பாஸ்?

2. நீங்கள் அடிக்கடி போனை எடுத்து, பேட்டர்ன் போட்டு அன்லாக் செய்துவிட்டு, எதற்கு போனை எடுத்தோம் என்பதையே மறந்துவிட்டு வெறுமனே டைம் மட்டும் பார்த்துவிட்டு, மீண்டும் லாக் செய்யும் நபர் என்றால், உங்கள் பேட்டர்னை இன்னும் சுலபமாக கண்டுபிடித்து விடலாம்.

நீங்கள் போனை அன்லாக் செய்த விரல் தடம், உங்கள் போன் டிஸ்ப்ளேயில் அழகாக பதிந்திருக்கும். அதன் பின்பு லாக் செய்யும் போது, பவர் பட்டனைத் தான் பயன்படுத்தியிருப்பீர்கள். எனவே அதைவைத்தும் கூட எளிதாக பேட்டர்னை யூகித்துவிடலாம். அட இப்படி சி.ஐ.டி வேலை எல்லாம் செஞ்சு அன்லாக் செய்யும் அளவுக்கு...நம்ம போன் அவ்ளோ வொர்த்தா பாஸ்?...என நீங்கள் யோசித்தால், அப்புறம் எதுக்கு ப்ரோ அந்த லாக்கு?

3. வேற என்ன பண்ணலாம்?

நிச்சயமாக உங்கள் போனில் இருக்கும் தகவல்கள் அனைத்தும் முக்கியமானதுதான். எனவே அதற்கு பாதுகாப்பும் நிச்சயம் தேவை. எனவே உங்கள் போனில் ஃபிங்கர்பிரின்ட் சென்சார் போல, பயோமெட்ரிக் பாதுகாப்பு அம்சங்கள் இருந்தால் அதைப் பயன்படுத்துவதே சிறப்பு. அல்லது பாஸ்வேர்டு அல்லது பின் நம்பர் ஆப்ஷனை பயன்படுத்துவதும், பாதுகாப்புக்கு ஏற்றது.

பாஸ்வேர்டு வைக்கும்போது, எப்படி சில தவறுகளை எல்லாம் செய்யவே கூடாதோ, அதுபோலவே பேட்டர்ன்லாக் விஷயத்திலும் கவனம் தேவை ட்யூட்ஸ்!

 


இனி கவலை இல்லை ஸ்மார்ட்போனை தொட்டாலே ஜார்ஜ் ஏறி விடும். அட உண்மைதாங்க..!

பக்காவான தொழில்நுட்பங்களுடன் ஸ்மார்ட்போனை தொட்டாலே ஜார்ஜ் ஏறும்படி விரல்களை சார்ஜராக மாற்றியுள்ளனர் தொழில் நுட்ப வல்லுனர்கள்.

ஸ்மார்ட்போனில் பெரிய பிரச்னை என்னவென்றால் சார்ஜ் தீர்ந்துவிடுவது தான். எவ்வளவு தான் விலையுயர்ந்த போனாக இருந்தாலும், அதில் புதிய தொழில்நுட்பங்கள் வந்தாலும் இன்றளவும் இந்த பிரச்னை விடாமல் துரத்துகிறது.

இதனை முறியடிக்கும் நோக்கில் பென்சில்வேனியா பல்கலைக்கழக விஞ்ஞானிகள் ஆர்கானிக் பாலிமரானால் ஆன செல்போனை கண்டுபிடித்து விட்டார்கள்.

இந்த ஆர்கானிக் பாலிமரால் செய்யப்பட்ட ஸ்மார்ட்போனின் திரையை தொட்டால் சார்ஜ் ஏறும் விதத்தில் வடிவமைத்துள்ளனர்.

இதில் உள்ள மற்றொரு சிறப்பம்சம் என்னவென்றால் மழைத்துளி திரையில் விழும்போது அதனை மின்சாரமாக்கி பேட்டரி தானாக சார்ஜ் ஏறும்படி சோதனை நடத்தி வருகின்றனர்.

ஸ்மார்ட்போன்களில் உள்ள வயர்லெஸ் சென்சார்கள் இத்தகைய தொழில்நுட்பத்தில் முக்கிய பங்கு வகிக்கின்றன.

இதனால் ஸ்மார்ட்போனை பயன்படுத்தும் போது தானாக சார்ஜ் ஏறி விடுகிறது. அயனுக்குரிய டையோடு பேட்டரியில் பொருத்தபட்டுள்ளதால் பேட்டரிக்கு மைக்ரோவாட்ஸ் மின்சாரம் கிடைக்க பெறுகிறது.

அப்புறம் என்ன அசத்துங்க மக்காஸ்.





No comments: