அன்பு நெஞ்சங்களுக்கு
சென்ற இடத்திலெல்லாம் சிறப்பு பெற்று, சென்ற இடங்களில்
உள்ளவர்களையும் வாழ வைத்து, அன்றும், இன்றும் உலகை செழிப்புற செய்து
கொண்டு இருக்கும் அன்புத் தமிழர்கள் அனைவருக்கும் அன்பார்ந்த வணக்கங்கள்!
இதுவரை, நான் படித்து, கேட்டு, ரசித்து
மகிழ்ந்த துணுக்குகளை, செய்திகளை, சிந்தனைகளை, கதைகளை உங்களுடன் பகிர்ந்து
கொள்ள விழைந்ததின் பலனாக உருவானதே இந்த பக்கங்கள். இந்த பக்கங்களில்
எழுதப் பட்டுள்ளவை அனைத்தும் சிரிக்கவும், சிந்திக்கவும், தெரிந்து
கொள்ளவும் பகிர்ந்து கொள்ளப்பட்டவையே.
உங்களுக்குத் தெரிந்தவற்றை எனக்கு அனுப்புவதன் மூலம் நம் உலகத் தமிழ் நண்பர்களின் மனதை லேசாக்கி, மகிழ்வித்து, மெருகேற்றி அவர்கள் மகிழ, நாமும் மகிழ்வோம். படித்து மகிழுங்கள். மற்றவருடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்களின் எண்ணங்களை என்னுடனும் பகிர்ந்து கொள்ளுங்கள்.
குறிப்பு:
சில மருத்துவ குறிப்புகள் தெரிந்து கொள்ளும் வகையில் படித்தவை பகிரப்பட்டுள்ளன. இவை தெரிந்து கொள்ளும் நோக்கத்திற்காக மட்டுமே. இதை நடைமுறையில் பரிசோதிக்க வேண்டாம். அதற்கு பிளாக் எவ்விதத்திலும் பொறுப்பேற்காது.
தமிழின் இனிமையில்
வாழ்த்துகளுடன் .....
No comments:
Post a Comment