ஒரு சலவை தொழிலாளிகிட்ட ஒரு நாயும்,
கழுதையும் இருந்துச்சு. ஒரு நாள் அந்த சலவை தொழிலாளி ராத்திரி நல்லா
தூங்கிட்டுருக்கும் போது வீட்டுக்குள்ள கதவை உடைச்சிட்டு ஒரு திருடன்
வந்துட்டான். சலவை தொழிலாளி நடப்பது தெரியாமல் நல்ல உறக்கத்திலிருக்க,
திருடனைப் பார்த்த நாய் குரைக்காமல் கம்முன்னு இருந்துச்சு.
சரியா சோறே போடறதில்லை, இவனுக்கு நாம ஏன் உதவி பண்ணனும்னு நாய் குரைக்க வில்லை. அதைப்பார்த்த கழுதை என்னடா இவன் கம்முன்னு இருக்கான், குரைச்சு முதலாளியை எழுப்புவான்னு பார்த்தா சும்மா இருக்கான், சரி நாமளாவது சத்தம் போட்டு முதலாளிக்கு திருடன் வந்ததை அலர்ட் பண்ணுவோம்னுகத்த ஆரம்பிச்சுது.
சத்தம் கேட்டதும் கள்ளன் ஓடிவிட்டான்.
சத்தத்தில் தூக்கத்தில் இருந்து எந்திருச்ச சலவை தொழிலாளி ஒரு கட்டையை
எடுத்து பளார்னு கழுதை தலைல ஒரே அடி. கூறுகெட்ட கழுதை நேரங்காலம் தெரியாம
கத்திகிட்டு இருக்கேன்னு கழுதையை திட்டிவிட்டு திரும்பவும்
படுத்துகிட்டான்.
நீதி : ஆபிஸ்ல என்னவேலை கொடுத்திருக்கோஅதைமட்டும்தான் செய்யனும் ஓவரா சீன் போட்டா இப்படித்தான்.
இந்தக்கதை மற்றொரு கோணத்தில்...
கழுதை கத்தியதும் எழுந்த சலவைத் தொழிலாளி, கழுதை சும்மா கத்தியிருக்காது காரணாமாகத்தான் கத்தியிருக்கும் என்று எழுந்து பார்த்து திருடன் வீட்டுக்கு வந்ததால்தான் கழுதை கத்தியது எனப் புரிந்து கொண்டான். அடுத்த நாள் கழுதைக்கு வகைவகையான சாப்பாடு போட்டான்.

நாயைக் கண்டு கொள்ளவே இல்லை. கழுதையோட ஆர்வக் கோளாறும்,
விசுவாசமும் முதலாளிக்கு பிடித்துவிட இவன் ரொம்ப நல்லவன்டா எவ்ளோ வேலை
கொடுத்தாலும் செய்யிறான்னு முதலாளியின் எல்லா வேலைகளையும் கழுதையை செய்ய
வைத்தான். நாய் செய்துக கொண்டிருந்த வேலையும் கழுதையின் மேல்
சுமத்தப்பட்டது.
நாய் சுகமாக வேலையே செய்யாமல் கழுதையை பார்த்து
சிரித்துக் கொண்டிருந்தது. வேலை செய்து அலுத்துப் போன கழுதை இப்போது வேறு
வேலைக்கு சிவி அனுப்பிகிட்டிருக்கு...
நீதி: ஆபிஸ்ல ஓவரா சீன் போட்டா இப்படியும் நடக்கலாம்.
நீதி: ஆபிஸ்ல ஓவரா சீன் போட்டா இப்படியும் நடக்கலாம்.
No comments:
Post a Comment