Wednesday, March 22, 2017

மனைவியையும், மடிக்கணினியையும் பார்த்துக்க 10 டிப்ஸ்


ஆபிஸ் செல்லும் ஆண்கள் பலருக்கு கம்ப்யூட்டர் தான் இப்போ முதல் மனைவி. மனைவியை விடவும் அதிகமாகக் கணினிகளோடுதான் காலம் தள்ள வேண்டியிருக்கிறது. 'அடேய்.. அதெப்படி உயிரும் உணர்வுமான மனைவியை லேப்டாப்புடன் ஒப்பிடுவாய்' அப்படினு யு டர்ன் அடிச்சு, ரோப் இல்லாம காத்துல கரணம் போட்டு உங்க காலால என்னை எட்டி உதைக்கவெல்லாம் ட்ரை பண்ணாதீங்க.. திஸ் ஈஸ் ரொம்ப ஜாலி போஸ்ட். 'இந்தப் பதிவு வெறும் நகைச்சுவைக்காக மட்டுமே'ன்னு ஸ்க்ரோலிங்ல ஓடறதா நெனைச்சுக்குங்க.

சீரியஸாக சிந்தித்து இதில் உள்ள நற்கருத்துக்களை நடுமண்டைக்குள் ஏற்றிக்கொள்வதும், படித்து முடித்தவுடன் மேலே வலது மூலையில் இருக்கும் X சிம்பலை க்ளிக்கி வெளியே செல்வதும் உங்க இஷ்டம் பாஸ்!

* லேப்டாப் வாங்குறப்போ 10 பேர்ல ஆரம்பிச்சு 100 பேர் வரைக்கும் விசாரிப்போம். எதை வாங்கினா நல்லாருக்கும்கிறதுதான் நம்ம அடிப்படைக் கேள்வி. எல்லாரும் அவனவன் வெச்சிருக்கிற லேப்டாப்பை குறை சொல்லிட்டு, வேஸ்டுங்க.. வேற ப்ராண்ட் வாங்குங்கம்பான். ஆனா அதை எப்பவும் தூக்கிட்டுத் திரிவான். வாங்குறப்போ ஐடியாஸ் கேட்கிறதெல்லாம் ஓகே. ஆனா மெயின்டெனென்ஸ் நாமதான் பண்ணியாகணும்கிறதை மறக்காதீங்க.

* லேப்டாப் போலவே மனைவிக்கும் சில டிஃபால்ட் செட்டிங்ஸ் உண்டு. அதை எந்தக் காரணம் கொண்டும் மாற்ற முயற்சிக்கக் கூடாது. ஹேங் ஆனா அப்புறம் ரொம்பக் கஷ்டம் பாஸ்!

* லேப்டாப்பை எப்பயுமே சார்ஜ்ல போட்டுட்டே இருக்கக் கூடாதாம். அதே மாதிரிதான் அன்போ, கோபமோ ஒரே உணர்ச்சியைக் காட்டிட்டே இருக்கக் கூடாது. அளவே நலம்னு 'வைஃபாலஜி' க்ளாஸ்ல சொல்லிக் கொடுத்திருப்பாங்க, அதை ஞாபகம் வெச்சுக்கணும்.

* லேப்டாப்பை பாதிக்கிறது, சார்ஜ்ல இருக்கிறப்போ வர்ற பவர் Fluctuations அப்படிம்பாங்க. அதே மாதிரிதான் அவங்க உணர்வுகள்லேயும் 'ஏற்ற இறக்கங்கள்' இருக்கும். அதை ரொம்ப கவனமா கையாள வேண்டியது அவசியம்!

* லேப்டாப் ப்ரைட்னஸ் கூட்டி வெச்சுக்கிட்டா க்ளியரா தெரியுது, அதே பொண்டாட்டி முகத்துல ப்ரைட்னஸைக் கூட்ட முயற்சி செஞ்சிருக்கீங்களா? சிந்திப்பீர்! செயல்படுவீர்!

* தேவையில்லாத நேரத்துல ஆன் பண்ணினதை, அப்டியே ஸ்லீப் மோட்ல வெச்சீங்கன்னாலும் லேப்டாப் உள்ளே ஓடிட்டுதான் இருக்குமாம். நீங்க ஆபீஸ் வந்தபிறகும், மனைவிக்கு வேலை வைக்கிற மாதிரி ஒரு இடத்துல எடுத்ததை இன்னொரு இடத்துல வெச்சுட்டு வர்றது, நம்ம டேபிள், டீபாயை அலங்கோலமா வெச்சுட்டு வர்றதுன்னு பண்ணினீங்கன்னா, அவங்க ஓய்வெடுக்கவே முடியாது. பவர் ஷட் டவுன் பண்ணினாதான் லேப்டாப்புக்கு நீண்ட ஆயுள். அதே மாதிரி அவங்களுக்கும் அப்பப்போ ஓய்வெடுக்கணும்ல? என்ன நான் சொல்றது? (இதை என் பொண்டாட்டி மட்டும் படிக்கக் கூடாது ஆண்டவா!!)

                             

* லேப்டாப் வெச்சுக்கிற Bag ரொம்ப முக்கியம். மனைவி விஷயத்துல அவங்க அதிகமா இருக்கப்போற இடம்னு வெச்சுக்கலாம். வீடு & வெளியில் போகும்போது கார். இவை ரெண்டையும் கவனமா பார்த்துப் பார்த்து வாங்கிக் கொடுத்து அதுல வெச்சு அவங்களை அழகு பார்க்கற கணவனுக்கு ஆல்வேஸ் ஹேப்பிதான்!

* அப்பப்போ லேப்டாப்பை அப்டேட் பண்ணச் சொல்லிக் கேட்கும். எதுக்குனு விட்டுடாம அப்டேட் பண்றோம்ல? அதே மாதிரி நாட்டு நடப்புகள், வீட்டு விஷயங்கள்ல அவங்க பார்வையைக் கேட்டு நாமளும் அப்டேட் ஆகிக்கலாம். நம்ம பார்வையை அவங்ககூடவும் பகிர்ந்துக்கலாம். புதிய பொருட்கள் வாங்கிக் கொடுத்து அவங்களையும் அப்டேட் ஆக்க மறக்கக் கூடாது! * இந்த பாயின்ட் ரொம்ப முக்கியம். தினமும் இரவு லேப்டாப்பை அணைச்சு வெச்சுக்கணுமாம். இதுக்கு விளக்கம் தேவையில்லைனு நினைக்கிறேன்!



No comments: