Thursday, April 6, 2017

சூரிய பகவானை சமாளிப்பது எப்படி? - அதிரிபுதிரி டிப்ஸ்




வெயில் வாட்டி எடுக்க ஆரம்பிடுச்சுடுச்சு. கொளுத்துற சூரிய பகவான் பார்வையில இருந்து தப்பிக்க சில அதிரிபுதிரி ஐடியாஸ் இதோ!

      

இத்தனை நாள் நாம் பள்ளத்தாக்கிலே சரிந்தும், ஸ்பீட் பிரேக்கரில் ப்ரேக் அடிக்காமல் போனதற்கும், இன்ஜினுக்கு ஆயில் ஊற்றாமல் கதறவிட்டதற்கும் சேர்த்து, நமக்குப் பாடம் புகட்ட கடவுள் பைக்குகளுக்கு ஒரு 'டைம்' ஒதுக்குவார். அதுதான் வெயில் காலம். வண்டியை வெயிலில் நிறுத்தினால் அது நம்மை 'பின்னால்' சுட்டு பழி தீர்த்துக்கொள்ளும். ஹாஹா, நாம யாரு? 'ஐ யம் நாட் பேட், ஐ யம் ஜஸ்ட் ஈவில்' னு சித்தார்த் அபிமன்யு மாதிரி பேசி நிழலில் சாய்ச்சுவிட்டா? 'அடிக்கிற வெயில் கூரையைப் பிச்சிக்கிட்டு அடிக்குமாம்'கிற புதுமொழி கணக்கா சீட்டு கொதிக்குது!

வீட்ல ஃபேன் ஸ்பீடு குறைஞ்ச மாதிரி தெரிஞ்சா, வெயில் பீக்ல இருக்குன்னு அர்த்தம். ஃபேன் எப்பவும் போல அதே ஸ்பீடுலதான் சுத்துது. நமக்குதான் ஓவரா கொட்டுது. #'ஸ்பீடு ஸ்பீடு ஸ்பீடு வேணும் ஸ்பீடு காட்டி போடா நீ'

ஃபேஸ்புக்கில் 'எவ்வளவு வெயில் அடித்தாலும் எங்க சென்னைடாவ்வ்வ்வ்'னு பெருமை பீத்தக்கலை ஸ்டேட்டஸ் போட்டுட்டு ரகுவரன் மாதிரி கழுத்துகிட்ட இருக்கிற வேர்வையைத் துடைச்சு தெறிக்கவிடலாம். #வெயிலில் கர்ச்சீப் இல்லாதவனை சீப்பாக பார்க்கும் சமுதாயம்.

மழைக் காலத்துல திடீர்னு முளைச்சா அது காளான். வெயில் காலத்துல திடீர்னு முளைச்சா அது நுங்கு, இளநீர், தர்பூசணிக் கடை. யோசனையே வேண்டாம். வண்டியை நிறுத்திட்டுப் போய் ஒரு சிப் அடிச்சு, ரெண்டு துண்டு சாப்பிட்டுட்டு வந்து, சீட்ல துண்டைப் போட்டு உட்கார்ந்து, திரும்பி நம்ம பயணத்தைத் தொடரலாம். #ஏனோ வானிலை மாறுதே.

டி.வி-யில் 'இது மாம்பழ சீசன்'னு ஒரு பொண்ணு மஞ்ச சேலை (இல்ல, சேலை மாதிரி ஏதோ ஒண்ணு) கட்டிக்கிட்டு கைல மாங்கோ ஜூஸ் பாட்டிலோட வரும். 'நீ அப்படியே நில்லும்மா'னு சொல்லிட்டு, வெளியே போய் ஒரு கிலோ பங்கனபல்லியோ, அல்போன்ஸோ வாங்கிட்டு வந்து, வெறுப்பேத்திக்கிடே சாப்பிடலாம். #ஒரிஜினல் இருக்கும்போது டூப்ளிகேட் எதுக்கும்மா?

காலையிலே துணிக் காயப்போட்ட அம்மா, மதியானமே மாடிக்குப் போய் எடுத்துட்டு வாடா'னு சொல்றாங்களா? அப்புடின்னா, துணி எரிஞ்சுப் போயிடுமோங்கிற பயம் அவங்களுக்கு. #என்னா வெயிலு, துணிக்கே பெயிலு.

வெயில் காலத்துல குளிக்கிறது ரொம்ப அவசியம். ஏன்னா, நாம் கேட்காமலே அந்தச் சூரியன் நம்மை உப்புத் தண்ணியில குளிப்பாட்டுறதால நீ யாரு என்னைக் குளிப்பாட்ட?னு வைராக்கியதோட நாமே குளிச்சிட்டா, நம்மைச் சுற்றி இருக்கிறவங்களுக்கு அது நல்லது. # நெருங்கி வருவாய், நெருங்கி வருவாய் மொமென்ட்தான்.

No comments: