உடல் எடையைக் குறைப்பது என்பது அவ்வளவு எளிதான காரியமல்ல. உடல் எடையைக் குறைக்க பலரும் கடுமையான டயட்டை மேற்கொண்டு வருகின்றனர். இன்னும் சிலர் பல நேரங்களில் சரியாக சாப்பிடாமல், பசியில் வாடுவார்கள். உடல் எடையைக் குறைக்க சாப்பிடாமல் இருந்தால் மட்டும் போதாது.
உடலின் மெட்டபாலிசத்தை அதிகரிக்கும் மற்றும் உடலுக்கு வேண்டிய சத்துக்கள் நிறைந்த உணவுகளைத் தேர்ந்தெடுத்து உட்கொள்ள வேண்டும். சிலர் எடையைக் குறைக்க இரவு நேரத்தில் உணவைத் தவிர்ப்பார்கள். ஆனால் இரவு உணவு மிகவும் இன்றியமையாதது. பசியுடனேயே இருந்தால், அல்சர் தான் வரும்.
எனவே தமிழ் போல்ட் ஸ்கை, உடல் எடையைக் குறைக்க நினைப்போர் இரவில் சாப்பிட வேண்டிய உணவுகளைப் பட்டியலிட்டுள்ளது.
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
க்ரீக் தயிர்
இதில் புரோட்டீன் அதிகமாகவும், சர்க்கரை குறைவாகவும் உள்ளது. இதில் உள்ள புரோட்டீன் நீண்ட நேரம் வயிற்றை நிரப்பி வைக்கும் மற்றும் தூங்கும் போது தசைகள் மெலிவடைய உதவும்.
செர்ரி பழங்கள்
செர்ரி பழங்களில் மெலடோனின் என்னும் தூக்கத்தை சீராக்கும் ஹார்மோன் உள்ளது. ஆகுவே இப்பழத்தை உட்கொண்டால், இரவில் நல்ல தூக்கம் கிடைப்பதோடு, உடல் எடையும் குறையும்.
வேர்க்கடலை வெண்ணெய் மற்றும் முழு தானிய பிரட்
வேர்க்கடலை வெண்ணெயில் ட்ரிப்டோஃபேன் என்னும் தூக்கத்திற்கு உதவும் அமினோ அமிலம் உள்ளது. முழு தானிய பிரட்டில் வைட்டமின் பி உள்ளது. இவை வயிற்றில் தேங்கியுள்ள கொழுப்புக்களைக் கரைக்க பெரிதும் உதவியாக இருக்கும்.
புரோட்டீன் ஷேக்
மாலையில் உடற்பயிற்சி செய்து சோர்வடைந்துள்ள உடலைப் புதுப்பிக்க புரோட்டீன் ஷேக் உதவும். எனவே இந்த புரோட்டீன் ஷேக்கை கூட இரவில் குடிக்கலாம்.
காட்டேஜ் சீஸ்
இந்த சீஸில் கேஸின் என்னும் புரோட்டீன் உள்ளது. இது மெதுவாக உடலில் வெளியிடப்படும். இது வயிற்றை நிரப்புவதோடு, தூக்கத்தின் போது தசைகளை சரிசெய்யவும் உதவும். முக்கியமாக இந்த சீஸ் இரவில் நல்ல தூக்கத்தைப் பெற உதவும்.
வான்கோழி
வான்கோழியை இரவில் சாப்பிட்டால், இரவில் நல்ல தூக்கம் வருவதோடு, ஆரோக்கியமான வழியில் தசைகளை மெருகேற்றும்.
வாழைப்பழம்
வாழைப்பழத்தில் உள்ள அமினோ அமிலம் இரவில் வேகமாக தூங்க உதவும் மற்றும் அதில் உள்ள நார்ச்சத்து வயிற்றை நிரப்பும். முக்கியமாக இந்த பழத்தை இரவில் சாப்பிட்டால், சர்க்கரை உணவுகளின் மீதுள்ள நாட்டம் குறையும்.
சாக்லேட் மில்க்
சாக்லேட் மில்க் உடல் எடையைக் குறைக்க உதவும் பானங்களுள் ஒன்று. இதில் உள்ள கால்சியம், கொழுப்புக்களைக் கரைக்க உதவும். மேலும் இதில் உள்ள புரோட்டீன் நீண்ட நேரம் பசி எடுக்காமல் தடுக்கும்.
பாதாம்
பாதாமை இரவு நேரத்தில் சாப்பிட்டால், தசைகள் இரவில் சரிசெய்யப்படும் மற்றும் இதில் உள்ள நார்ச்சத்து பசி எடுக்காமல் தடுக்கும். முக்கியமாக பாதாம் உடல் எடையைக் குறைக்க உதவும் சூப்பர் உணவுகளில் ஒன்றாகும்.
No comments:
Post a Comment